வரவு செலவு திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியுமா? -கேள்வி எழுப்புகிறார் ஹக்கீம்!!

வரவு செலவு திட்டத்தில் ஜனாதிபதி பல முன்மொழிவுகளை முன்வைத்துள்ள நிலையில் அதனை நடைமுறைப்படுத்த முடியுமா என்பது பாரிய கேள்வியாக உள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் எம்.பி.யுமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
 பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான ரணில் விக்கிரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் தொடர்பில் கருத்துக் கூறுகையிலேயே இவ்வாறுத்தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
அரசாங்கம் கடந்த வருடத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த வரவு செலவுத் திட்டத்தில் நூற்றுக்கு 90வீதமான முன்மொழிவுகள் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்த முடியாமல் போயுள்ளன . அதேபோன்று அரசாங்கத்தினால் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டு வரும் கடன் மறுசீரமைப்பு இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.அதனை நடைமுறைப்படுத்தாமல் வேறு எதையும் முன்னெடுக்க முடியாது. வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக ஜனாதிபதி சிறந்த விடயங்களை பாராளுமன்றத்தில் முன்வைத்தார். .எனினும் அரசாங்கத்தினால் அதனை நடைமுறைப்படுத்த முடியுமா? என்பதே பாரிய கேள்வியாக உள்ளது என்றார்.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!