ஆப்பிள் நிறுவனம் தங்களின் பயனர்களுக்காக பல பாதுகாப்பு சேவைகளை வழங்கி வருகிறது.
அதிலும் குறிப்பாக, ஆப்பிள் ஐபோன்களில் இருக்கும் ஃபைண்ட் மை ஆப் (Find My App) சேவை என்பது நம் ஆப்பிள் சாதனங்களை கண்காணிக்கவும், அவற்றைக் கண்டறியவும் உதவும் சக்திவாய்ந்த செயலி ஆகும்.
நீங்கள் ஐபோன் வைத்திருந்தால் இதனை நிறுவுவது மிகவும் எளிமையான காரியமாகும்.
இதற்காக நம் ஸ்மார்ட்போனில் இருப்பிட சேவைகள் (location service) எப்போதும் ஆக்டிவாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
Find My App சேவை GPS தொடர்புடைய இருப்பிட சேவைகளைப் பின்பற்றி பயன்படுகின்றன என்பதை நினைவில் வைத்திருங்கள்.
முதலில் இதை எப்படி ஆக்டிவேட் செய்வது என்று பார்க்கலாம்.
Find My App சேவையை ஆக்டிவேட் செய்வது எப்படி?
இதற்கு கீழே வரும் குறிப்புகளைப் பின்பற்றினால் போதும்.
முதலில் Settings பக்கத்தை திறக்க வேண்டும், பின்னர் உங்கள் பெயரை உள்ளிட வேண்டும், அடுத்ததாக Find My என்றிருக்கும் பயன்பாட்டை கிளிக் செய்ய வேண்டும், தொடர்ந்து ‘OK’ என்பதை கொடுக்கவும்.
இப்போது ‘‘Enable My Location’ மற்றும் ’Send Last Location’ ஆகிய செட்டிங்ஸை ஆக்டிவேட் செய்யும்படி கோரிக்கை வைக்கப்படும்.
அதை ஆக்டிவேட் செய்துவிட்டு ‘Share My Location’ என்பதை ஆக்டிவேட் செய்ய வேண்டும்.
இதனைத் தொடர்ந்து உங்கள் கருவி இந்த சேவையுடன் இணைக்கப்பட்டுவிடும்.
மேலும், ஒரே ஆப்பிள் கணக்கில் இயங்கிக் கொண்டிருக்கும் சாதனங்கள் இந்த சேவையுடன் தானாக இணைந்து கொள்ளும்.
ஆனால், பிற சாதனங்களில் வேறு கணக்கு வழியாக உள்நுழைந்திருந்தால், அதை நாம் தான் இதில் சேர்க்க வேண்டும்.
இதற்காக முதலில் find my app சேவையைத் திறக்கவும்.
Devices பக்கத்திற்கு செல்லவும்.
அங்கிருக்கும் ‘+’ ஐகானை கிளிக் செய்யவும்.
அதில் ஏர்டேக், ஏர்பாட் அல்லது ஏதேனும் உங்கள் ஆப்பிள் கருவியை இணைக்க விரும்பினால், அதை தேர்வு செய்யவும்.
சிறிது நேரத்தில் ஸ்கேன் செய்து உங்கள் புதிய device காட்டப்படும்.
அப்போது அதில் கேட்கப்படும் ஆப்பிள் பாஸ்வேர்டை கொடுக்க வேண்டும்.
அவ்வளவு தான். உங்கள் வேறொரு ஆப்பிள் சாதனம் ஃபைண்டு மை டிவைஸ் பயன்பாடுடன் இணைக்கப்பட்டு விடும்.
சேர்க்கப்பட்ட டிவைஸ்களை விடுவிக்க விரும்பினால், இதே பக்கத்திற்குச் சென்று அகற்ற வேண்டிய டிவைஸை தேர்வு செய்து, ’Remove’ என்ற ஆப்ஷனைத் தட்டியப் பின்னர் பாஸ்வேர்டை உள்ளிட்டால் கேட்ஜெட் ஃபைண்டு மை ஆப் பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்டுவிடும்.