அவுஸ்திரேலியாவை அளவிட்ட கேமர் ரோச்

பிரிஸ்பேன் டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அவுஸ்திரேலியா அணி திணறி வருகிறது.

The Gabba மைதானத்தில் நடந்து இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் விளையாடி வருகின்றன.

முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, ஆரம்பத்தில் விக்கெட்டுகளை பறிகொடுத்த நிலையில் கவேம் ஹாட்ஜ் மற்றும் ஜோஷுவா டா சில்வா நங்கூரம் போல் நிலைத்து நின்று ஆடினர்.

இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி சரிவில் இருந்து மீண்டது. இவர்களது கூட்டணி 149 ரன்கள் குவித்தது. 79 ரன்கள் எடுத்த நிலையில் ஜோஷுவா ஆட்டமிழந்தார்.

அதன் பின்னர் ஹாட்ஜ் 71 ரன்களில் அவுட் ஆக, கெவின் சின்கிளைர் அபாரமாக ஆடி 50 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 311 ஓட்டங்கள் எடுத்தது.

அவுஸ்திரேலிய அணியின் தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளும், ஹேசல்வுட் மற்றும் லயன் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சை தொடங்கியது.

வேகப்பந்து வீச்சாளர் கேமர் ரோச் (Kemar Roach) அவுஸ்திரேலிய அணி அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்தார்.

அவரது பந்துவீச்சில் ஸ்டீவன் ஸ்மித் LBW முறையில் 6 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து கேமரூன் கிரீன் 8 ரன்னிலும், டிராவிஸ் ஹெட் முதல் பந்திலும் ஆட்டமிழந்தனர்.

லபுஷேன் 3 ரன்னிலும், அதிரடி காட்டிய மிட்செல் மார்ஷ் 21 ரன்னிலும் அல்சரி ஜோசப் பந்துவீச்சில் அவுட் ஆகினர்.

தற்போது வரை அவுஸ்திரேலிய அணி 15 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 74 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

Related posts

உலகக் கோப்பையை வென்ற இந்தியா! மோடி வாழ்த்து!

தேசிய அளவில் சாதனை படைத்த யாழ். மாணவி!

சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்ஷன்!