டூபிளெஸ்ஸிஸ் அணியை தட்டித்தூக்கிய பட்லரின் படை

SA20 தொடர் போட்டியில் பார்ல் ராயல்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியது.

முதலில் ஆடிய ஜோபர்க் (Joburg) அணியில் கேப்டன் டூபிளெஸ்ஸிஸ் 17 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.

அடுத்து வந்த லேஸ் டு ப்ளூய் அதிரடியாக 16 பந்துகளில் ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 30 ரன்கள் விளாசினார்.

தொடக்க வீரர் ரீஸா ஹென்றிக்ஸும் அதிரடியில் மிரட்டினார். அவருக்கு துணையாக மொயீன் அலி 12 பந்துகளில் 2 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 23 ரன்கள் எடுத்தார்.

கடைசி வரை ஆட்டமிழக்காமல் அரைசதம் விளாசிய ஹென்றிக்ஸ் 3 சிக்ஸர் மற்றும் 7 பவுண்டரிகளுடன் 79 (56) ரன்கள் குவித்தார்.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய பார்ல் ராயல்ஸ் அணி 6.3 ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து 42 ரன்கள் எடுத்தது.

மிட்சேல் வான் 7 ரன்னில் அவுட் ஆக, பின்னர் விஹான் லுபிபே மற்றும் டேன் விலாஸ் கூட்டணி அமைத்தனர்.

இவர்களின் இணை அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றது. லுபிபே 48 பந்துகளில் 57 ரன்கள் (3 சிக்ஸர், 3 பவுண்டரிகள்) எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

அடுத்து 19வது ஓவரில் 42 (26) ரன்கள் எடுத்திருந்த டேன் விலாஸ் ரன் அவுட் ஆனார்.

கடைசி ஓவரில் வெற்றிக்கு 5 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில் பாபியன் ஆலன் (17) போட்டியை முடித்து வைத்தார்.

இதன்மூலம் பார்ல் ராயல்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரீஸா ஹென்றிக்ஸ் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

Related posts

உலகக் கோப்பையை வென்ற இந்தியா! மோடி வாழ்த்து!

தேசிய அளவில் சாதனை படைத்த யாழ். மாணவி!

சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்ஷன்!