தேர்தலை இலக்கு வைத்தே வரவு செலவுத் திட்டம்! – ஹர்ஷ டி சில்வா தெரிவிப்பு

எதிர்வரும் ஏப்ரல் ,ஒக்டோபர் மாதங்களில் நடக்கவுள்ள ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தல்களை இலக்கு வைத்தே 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி.யும் பொருளாதார நிபுணருமான கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான ரணில் விக்கிரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் தொடர்பில் கருத்துக் கூறுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
மிகவும் பொருளாதார நெருக்கடியான சூழலிலேயே நிதி அமைச்சரினால் இந்த வரவு செலவித்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்பதனை ஏற்றுக்கொள்கின்றோம். ஆனால் இதில் ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கான சம்பள , ஓய்வூதிய கொடுப்பனவுகள் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் முதலே அமுலாக்கம் என்று நிதி அமைச்சரான ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
எதிர்வரும் ஏப்ரல் ,ஒக்டோபர் மாதங்களில் ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தல்கள் நடத்தப்படவுள்ளதால் அந்த தேர்தல்களை இலக்கு வைத்தே இந்த வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. வர்த்தமானி அறிவித்தல் ஊடாக அதிகரிக்கப்பட்டுள்ள வரி விதிப்பை ஜனாதிபதி தெளிவுப்படுத்தவில்லை.தேர்தல் வெற்றியை இலக்காகக் கொண்டே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
ஆனால் சமூக கட்டமைப்பில் காணப்படும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் வரவு செலவுத் திட்டம் அமையவில்லை. அரச ஊழியர்களுக்கு 10 ஆயிரம் ரூபாவால் வாழ்க்கை கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனை வரவேற்கின்றோம். அரச துறையை விடவும் பல இலட்சம் பேர் தனியார் துறையில் சேவையாற்றுகிறார்கள். தனியார் துறை தொடர்பில் கவனத்தில் கொள்ளப்படவில்லை. இது பாரிய குறைபாடாகும் – என்றார்.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!