பிரித்தானிய பெண்ணுக்கு பிஸ்கட்டால் நேர்ந்த மரணம்!

அமெரிக்காவில் பிஸ்கட் சாப்பிட்டதால் இளம்பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இங்கிலாந்தின் கிழக்கு Lancashire பகுதியைச் சேர்ந்த இளம்பெண் Orla Baxendale (25). பாலே நடனக் கலைஞரான இவர், தனது நடன வாழ்க்கையை அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்துள்ளார்.

இவருக்கு கடுமையான வேர்க்கடலை ஒவ்வாமை இருந்துள்ளது. ஆகையால், சாப்பிடும் உணவுப்பொருட்களை வாங்கும்போது மிகுந்த கவனத்துடன் Orla இருந்துள்ளார்.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு மளிகைக் கடையில் பிஸ்கட்ஸ் வாங்கியுள்ளார். அதன் package label-யில் வேர்க்கடலை பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. ஆனால் அதில் வேர்க்கடலை கலந்திருந்துள்ளது.

இதனை அறியாத Orla அந்த பிஸ்கட்டை அவர் சாப்பிட்டுள்ளார். உடனே அவருக்கு ஒவ்வாமை ஏற்பட்ட கூறப்படுகிறது.

அதனை கட்டுப்படுத்த அவர் EpiPen எனும் ஊசியை செலுத்திக் கொண்டுள்ளார். ஆனாலும், Orla-வுக்கு Anaphylactic Shock ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் கடந்த 11ஆம் திகதி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

Orla Baxendale வின் அதிர்ச்சி மரணத்தால் அவரது குடும்பத்தினர் கற்பனை செய்ய முடியாத பேரழிவிற்கு ஆளாகியுள்ளதாக தி இன்டிபென்டன்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கிடையில் Stew Leonard-யின் மாளிகைக் கடை, Orla Baxendale-வின் இறப்புக்கு காரணமான Vanilla Florentine Cookies திரும்பப் பெற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

Related posts

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

அமெரிக்க தேர்தல்: பைடனுக்கு தொடரும் எதிர்ப்பு!

சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து!