பிரிட்டன் பாராளுமன்ற தேர்தல் இன்று துவங்குகிறது!

பிரிட்டன் பராளுமன்றத்திற்கு இன்று தேர்தல் நடைபெற உள்ளது. பிரிட்டன் பிரதமராக கன்சர்வேடிவ் கட்சியின் ரிஷி சுனாக் கடந்த 2022-ம் ஆண்டு முதல் பிரதமராக இருந்து வருகிறார். இவரது பதவி காலம் 2025 ஜனவரியில் நிறைவடைகிறது.

இந்நிலையில் பிரிட்டன் பார்லிமென்ட்டிற்கு முன்கூட்டியே ஜூலை 04-ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறும் எனவும், பார்லிமென்ட் கலைக்கப்பட்டதாக கடந்த மே 30 -ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து மொத்தமுள்ள 650 உறுப்பினர்களை கொண்ட பிரிட்டன் பார்லிமென்டிற்கு தேர்தல் இன்று நடைபெறுகிறது.

இத்தேர்தலில் மற்றொரு கட்சியான தொழிலாளர் கட்சியும் வலுவாக உள்ளதால் ஆட்சியை கைப்பற்ற வெற்றி வியூகம் வகுத்து வருகிறது.

Related posts

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

அமெரிக்க தேர்தல்: பைடனுக்கு தொடரும் எதிர்ப்பு!

சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து!