பிரித்தானியாவின் சோதனை மீண்டும் தோல்வி!

பிரித்தானியாவின் அணு ஆயுத சோதனை தோல்வியில் முடிந்துள்ளது.

உலக அரங்கில் பல்வேறு நாடுகள் தற்போது அணு ஆயுத சோதனைகளில் தீவிரமாக இறங்கியுள்ளன. அந்த வகையில், பிரித்தானியாவும் அணு ஆயுத சோதனைகளை அவ்வப்போது செய்து வருகிறது.

அதன்படி, தற்போது பிரித்தானியாவின் கடற்படையில் உள்ள ஹெச்எம்எஸ் வேன்கார்ட்(HMS Vanguard) என்ற நீர்மூழ்கி கப்பலில் இருந்து டிரிடண்ட் 2 (Trident 2) என்ற அணு ஆயுத ஏவுகணை ஏவப்பட்டது.

ஆனால், ஏவப்பட்ட சிறிது நேரத்திலேயே ஏவுகணை கடலில் விழுந்து நொறுங்கியது.

கடந்த 2016ம் ஆண்டு இதுபோன்ற ஒரு அணு ஆயுத சோதனை செய்யப்பட்டது. அந்த சோதனையும் தோல்வியில் முடிந்தது.

இதுபோன்ற சூழலில் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததால், அடுத்து அந்த நாடு யார் மீது வேண்டும் என்றாலும் போர் தொடுக்கலாம், இதை எதிர்கொள்ள பிரித்தானியா ராணுவம் தயாராக இல்லை என்று அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ட்ரம்பின் முன்னாள் ஆலோசகர் கூறியிருந்தார்.

இதனால், பிரித்தானியா அரசு போருக்கு தயாராகும் வகையில், தனது அணு ஆயுத பலத்தை அதிகரிக்க முடிவு செய்து, அணு ஆயுத சோதனை தற்போது நடத்தப்பட்டது. ஆனால், அதுவும் தோல்வியில் முடிந்ததால், இது பிரித்தானியாவுக்கு பெரிய தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

அமெரிக்க தேர்தல்: பைடனுக்கு தொடரும் எதிர்ப்பு!

சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து!