விசாவை நிறுத்தியது பிரித்தானியா! எந்த நாட்டினருக்கு தெரியுமா?

உக்ரை நாட்டவர்களுக்கு வழங்கி வந்த விசாவை பிரித்தானியா அரசு நிறுத்தியுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து போர் தொடுத்து வருகிறது. இதனால், உக்ரைன் நாட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் பிரித்தானியாவில் இருந்தால், அவர்கள் பிரித்தானியாவில் இருக்கும் தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் இணையும் வகையில் பிரித்தானியா அரசு, அவர்களுக்காக ‘குடும்ப விசா’ என்ற ஒன்றை வழங்கி வந்தது.

ஆனால், இந்த திட்டம் பிப்ரவரி 19ம் தேதியுடன் முடிவுக்கு வந்துவிட்டதாக, பிரித்தானியா அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால், உக்ரைனில் உள்ளவர்கள் பிரித்தானியாவுக்கு ‘குடும்ப விசா’ மூலம் இனி வர முடியாது.

விசா திட்டம்தான் முடிவுக்கு வந்துள்ளதே தவிர,பிரித்தானியா வந்திருக்கும் உக்ரைனியர்கள் யாரையும் தற்போது பிரித்தானியா அரசு வெளியேற சொல்லவில்லை. மேலும், உக்ரைனில் இருந்து போருக்கு தப்பி பிரித்தானியா வந்தவர்களுக்கு வழங்கி வந்த வீடுகள் திட்டம் இன்னும் நடைமுறையில்தான் உள்ளது.

இதன் மூலம் உக்ரைனியர்களைஇ பிரித்தானியர்கள் ஸ்பான்சர் செய்து தங்கள் வீடுகளில் தங்க வைப்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

அமெரிக்க தேர்தல்: பைடனுக்கு தொடரும் எதிர்ப்பு!

சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து!