முதல் முறையாக வெளிநாட்டவரின் விசாவை ரத்து செய்த பிரித்தானியா!

இங்கிலாந்தின் லண்டன் நகரில் போருக்கு எதிரான பேரணியில் கலந்துகொண்டு ஹமாஸை ஆதரித்த ஊடகவியலாளர் விசா ரத்து செய்யப்பட்டுள்ளது.
சமீபத்தில் லண்டனில் கூடிய சுமார் 3,00,000 மக்கள் இஸ்ரேல்-ஹமாஸ் போரை நிறுத்தக்கோரியும், காஸா மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என்றும் பதாகைகளை ஏந்தி பேரணி நடத்தினர்.
இந்த பேரணியில் எகிப்திய தொலைக்காட்சி தொகுப்பாளரும், யூடியூபருமான மொடாஸ் மாதார் (Moataz Matar) கலந்து கொண்டார்.
இவர் ஏற்கனவே, இஸ்ரேல் மீதான ஹமாஸின் முதல் தாக்குதலின்போது அதை தன் வாழ்க்கையின் மகிழ்ச்சியான நாள் என விவரித்திருந்தார்.
இந்நிலையில் இங்கிலாந்து உள்துறை அலுவலகம் மொடாஸின் விசாவை ரத்து செய்துள்ளது.
முன்னதாக யூத விரோத நடவடிக்கைகள் என்று குற்றம் சாட்டப்பட்ட வெளிநாட்டவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று இங்கிலாந்து உள்துறை குடிவரவு அமைச்சர் ராபர்ட் ஜென்ரிக் தெரிவித்திருந்தார்.
தற்போது பிரித்தானியாவால் விசா ரத்து செய்யப்பட்ட முதல் வெளிநாட்டவர் ஆனார் மொடாஸ் மாதார்.
யூத விரோத நடத்தையினால் விசாவை ரத்து செய்யக்கூடிய சாத்தியம் உள்ள 6 வெளிநாட்டவர்களில் ஒருவராக மொடாஸ் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

அமெரிக்க தேர்தல்: பைடனுக்கு தொடரும் எதிர்ப்பு!

சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து!