சுனில் நரைன் அணியை சம்பவம் செய்த போல்ட் – பூரன்!

இன்டர்நேஷனல் லீக் டி20 தொடரில் MI எமிரேட்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபுதாபி நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது.

ஷெய்க் சயீத் மைதானத்தில் நடந்த 6வது லீக் போட்டியில் சுனில் நரைனின் அபுதாபி நைட் ரைடர்ஸ் அணியும், நிக்கோலஸ் பூரனின் MI எமிரேட்ஸ் அணியும் மோதின.

முதலில் களமிறங்கிய அபுதாபி அணி டிரென்ட் போல்ட் மற்றும் அகேல் ஹோசெயின் பந்துவீச்சில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

மேலும் முகமது ராபித் கான் ஒருபுறம் தனது பந்துவீச்சில் தாக்குதல் தொடுக்க, அபுதாபி அணி 59 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்தது.

ஆந்த்ரே ரசல் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்த போராடினார்.

ஆனாலும், அந்த அணி 14.1 ஓவரில் 95 ரன்களுக்கு சுருண்டது.

போல்ட், முகமது தலா 3 விக்கெட்டுகளும், அகேல் ஹோசெயின் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

சிக்ஸர்களை தெறிக்கவிட்ட ரசல் 25 பந்துகளில் 48 ரன்கள் விளாசினார்.

பின்னர் களமிறங்கிய MI அணி 8.1 ஓவரிலேயே 96 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

கேப்டன் பூரன் 16 பந்துகளில் 5 சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 39 ரன்கள் எடுத்தார்.

அத்துடன் முகமது வசீம் 26 (20) ரன்களும், குசால் பெரேரா 22 (13) ரன்களும் எடுத்தனர்.

14 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றிய டிரென்ட் போல்ட் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

Related posts

உலகக் கோப்பையை வென்ற இந்தியா! மோடி வாழ்த்து!

தேசிய அளவில் சாதனை படைத்த யாழ். மாணவி!

சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்ஷன்!