சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்படும் குவைத்தில் பலியான தமிழர்களின் உடல்!

குவைத்தில் தீ விபத்தில் பலியான 7 தமிழர்களின் உடல்கள் உட்பட 31 உடல்கள் கொச்சி வந்தடைந்த நிலையில்இ அவர்களது உடல்கள் தனித்தனியாக ஆம்புலன்ஸ்கள் மூலம் அவரவர் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டு வருகிறது.

குவைத் நாட்டின் மன்காப் பகுதியில் 6 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 6 மாடி கட்டிடம் கொழுந்துவிட்டு எரிந்தது. இந்த விபத்து நடந்த போது மொத்தம் 150-க்கும் அதிகமானோர் அக்கட்டிடத்தில் உறங்கிக் கொண்டிருந்தனர். இதில் மொத்தம் 45 இந்தியர்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் பலியாகினர். 50-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உயிரிழந்தவர்களில் 23 பேர் கேரளாவை சேர்ந்தவர்கள், 7 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். எஞ்சிய 15 பேரும் கர்நாடகா, ஆந்திரா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். தரை தளத்தில் தங்கியிருந்த எகிப்து நாட்டை சேர்ந்த ஒருவரின் கேஸ் சிலிண்டரில் இருந்து, வாயு கசிவு ஏற்பட்டதால் இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

குவைத் தீ விபத்தில் உயிரிழந்த 45 இந்தியர்களின் உடல்களை இந்தியாவுக்கு கொண்டு வர சிறப்பு விமானம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. குவைத்துக்கு மத்திய இணை அமைச்சர் கேவி சிங் சென்று இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தார். இந்த நிலையில் 7 தமிழர்கள் உட்பட 45 இந்தியர்களின் உடல்களுடன் குவைத்தில் இருந்து இந்திய விமானப் படையின் சிறப்பு விமானம் இன்று அதிகாலை 3.30 மணிக்கு புறப்பட்டது. குவைத்தில் இருந்து விமானம் இன்று காலை 10.30 மணிக்கு கொச்சி வந்தடைந்தது.

7 தமிழர்களின் உடல்களை தமிழ்நாடு அமைச்சர் செஞ்சி மஸ்தான் பெற்றுக் கொண்டார். இதற்காக செஞ்சி மஸ்தான் கொச்சி விமான நிலையத்தில் முன்கூட்டியே சென்று காத்திருந்தார். உடல்கள் அடையாளம் காணப்பட்டு, ஆம்புலன்ஸ்களில் ஏற்றப்பட்டு, அவரவர் சொந்த ஊர்களுக்கு கொண்டு செல்லும் பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இருந்து மொத்தம் 8 ஆம்புலன்ஸ்கள் கொச்சியில் ரெடியாக இருந்தன. அதில் 7 ஆம்புலன்ஸ்களில் தனித்தனியாக 7 பேரின் உடல்கள் ஏற்றப்பட்டு, அவரவர் சொந்த ஊர்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. ஒவ்வொரு ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கும், அவர்கள் செல்ல வேண்டிய வழித்தடம் – ரூட் மேப் விளக்கப்பட்டு உள்ளது. உறுதுணையாக காவல்துறையினரும் செல்கின்றனர்.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரானால் வரவேற்போம்: செல்வப்பெருந்தகை!