அதிமுகவுக்கு தூது அனுப்பும் பாஜக?

மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க பாஜக முயற்சி செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுகவுடன் நெருக்கமாக இருக்கும் தமக தலைவர் ஜி.கே.வாசன் சமீபத்தில், பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவை நேரில் சந்தித்து பேசினார். இதையடுத்து இவர் மூலம் அதிமுகவுடன் கூட்டணி வைக்க பாஜக அதிமுகவின் முக்கிய தலைவர்களுடன் பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளதாம்.

ஆனால், அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “இப்போதும் எப்போதும் பாஜகவுடன் கூட்டணி இல்லை” என திட்டவட்டமாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!