பாஜக 0, அதிமுக 0! மிகப் பெரிய ஷாக்கில் கட்சியினர்

தமிழ்நாட்டில் வரும் மக்களவை தேர்தலில் அதிமுக, பாஜகவுக்கு ஒரு இடம் கூட கிடைக்காது என்பது கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

மக்களவை தேர்தல் தொடர்பாக ‘Mood Of the Nation 2024’ என்ற பெயரில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு முடிவுகளை சற்றுமுன் இந்தியா டூடே வெளியிட்டுள்ளது.

அதன்படி, தமிழ்நாட்டில், திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி 39 இடங்களிலும், பாஜக, அதிமுக ஒரு இடங்களிலும்கூட வெற்றி பெறுவது கஷ்டம் என குறிப்பிட்டுள்ளது. இதைக் கண்ட அதிமுக மற்றும் பாஜகவின் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.

மேலும், மத்தியில் பாஜக கூட்டணி 304 இடங்களில் அமோக வெற்றி பெறும், காங்கிரஸ் வெறும் 71 இடங்களில் மட்டுமே வெற்றி பெறும் என கூறப்பட்டுள்ளது.

ஒருவேளை இந்த கருத்துக்கணிப்பு உண்மையானால், இந்திய வரலாற்றில் முதல்முறையாக மிக அதிக இடங்களில் வெற்றி பெற்று பாஜக ஆட்சி அமைக்கும். மூன்றாவது முறையாக மோடி பிரதமராக பதவியேற்பார்.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!