தள்ளுவண்டி கடையில் பில்கேட்ஸ்! வீடியோ

உலக பணக்காரர்களில் ஒருவரான பில்கேட்ஸ், தள்ளுவண்டி கடை ஒன்றில் டீ குடிக்கும் காணொளியை வெளியிட்டுள்ளார்.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பில்கேட்ஸ், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். இதற்கிடையில் அவர் பிரபல இன்ஸ்டா டிரெண்டிங் டீ மாஸ்டர் டாலி தள்ளு வண்டி கடையில் டீ குடித்துள்ளார்.

அந்த வீடியோவை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டு,”இந்தியாவில் எளிமையான ஒரு கப் தேநீரில் துவங்கி, எங்கு திரும்பினாலும் புதுமையை பார்க்க முடியும்” என குறிப்பிட்டுள்ளார்.

தனது வித்தியாசமான உடை, டீயை ஆற்றி வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் விதம் மூலம் டீ மாஸ்டர் டாலி இன்ஸ்டாவில் ட்ரெண்டிங் ஆனார். இவருக்கு என்று ஒரு தனி வாடிக்கையாளர்கள் கூட்டமே உள்ளது.

இவர் செய்யும் சில ஸ்டைல்கள் நடிகர் ரஜினிபோன்று இருப்பதும் ஒரு காரணம்.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரானால் வரவேற்போம்: செல்வப்பெருந்தகை!