அரசியலில் பெரிய மாற்றம்: ஜி.எல். தேர்தல் நடந்தால் அதற்கு ஆதரவளிப்பதாக பாரிஸ் கூறுகிறது….

நாட்டில் தேர்தல் நடத்தப்படுமானால் தற்போது நடைமுறையில் உள்ள நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபர் முறைமையை நீக்குவதற்கு எதிர்க்கட்சிகள் ஆதரவளிக்குமென நாடாளுமன்றத்தின் சுயாதீன உறுப்பினரான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, இலங்கையில் நடைபெறவுள்ள அதிபர்த் தேர்தலை ஒத்திவைக்கும் முயற்சிகளுக்கு ஒருபோதும் ஆதரவு வழங்கப்படாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதாகவும், அதனை தொடர்ந்து ஒக்டோபர் மாதம் தேர்தல் நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிபர் முறைமையை நீக்கம்

இந்த நிலையில், தேர்தல் நடத்தப்படுமானால் தற்போது நடைமுறையில் உள்ள நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபர் முறைமையை நீக்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி ஆகியன ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளன.

இதனை தொடர்ந்து, குறித்த தீர்மானத்தை தாமும் ஆதரிப்பதாக நாடாளுமன்றத்தின் சுயாதீன உறுப்பினரான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இலங்கை எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில், தேர்தலை நடத்துவதற்காக பாரிய நிதியை செலவிட முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன தெரிவித்திருந்ததை அவர் நினைவூட்டியுள்ளார்.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!