Big Bash League: பெர்த் அணியை சுக்குநூறாக்கிய இருவர்

பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிக்கு எதிரான பிக் பாஷ் லீக் நாக் அவுட் போட்டியில் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் 50 ரன்கள் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றி பெற்றது.

இப்போட்டியில் முதலில் களமிறங்கிய அடிலெய்டு அணியில், மேத்யூ வேட் 13 ரன்களில் ஆண்ட்ரு டை பந்துவீச்சில் போல்டு ஆனார்.

அடுத்து வந்த வெதரால்டு (Weatherald) அதிரடியில் மிரட்டினார். ஆனால் மறுபுறம்  டி ஆர்க்கி ஷார்ட் (6), தாமஸ் கெல்லி (6), நீல்ஸன் (1) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

சிக்ஸர், பவுண்டரிகளை விளாசிய வெதரால்டு 32 பந்துகளில் 56 ரன்கள் எடுத்தார். இதில் 2 சிக்ஸர், 8 பவுண்டரிகள் அடங்கும்.

பென் மானென்டி 23 (20) ரன்களும், தொர்ன்டன் 28 (21) ரன்களும் விளாச அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் 155 ரன்கள் குவித்தது.

பின்னர் களமிறங்கிய பெர்த் அணி, அடிலெய்டின் லாய்டு போப் மற்றும் கேமரூன் போய்ஸ் ஆகியோரின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 105 ரன்களுக்கு சுருண்டது.

அதிகபட்சமாக சாம் ஃபேன்னிங் 31 (20) ரன்களும். கூப்பர் 31 (22) ரன்களும் எடுத்தனர். அடிலெய்டு தரப்பில் லாய்டு போப் 4 விக்கெட்டுகளும், கேமரூன் போய்ஸ் 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

Related posts

உலகக் கோப்பையை வென்ற இந்தியா! மோடி வாழ்த்து!

தேசிய அளவில் சாதனை படைத்த யாழ். மாணவி!

சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்ஷன்!