குளிர்காலங்களில் கிடைக்கும் வேர்க் காய்கறிகளின் நன்மைகள்! அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்

குளிர்காலம் தொடங்கிய பின்னர் சில மண்ணுக்கு அடியில் விளையக்கூடிய காய்கறிகளை அதிகமாக நீங்கள் சந்தையில் பார்க்கலாம்.
அவற்றுள் சில உடலின் எடையை குறைக்கவும் மிகவும் உதவுகிறது.
கண் பார்வைக்கு உதவும் கேரட், பீட்டா கரோட்டின் நிறைந்த ஒரு உணவுப் பொருளாகும். இதில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது.
சக்கரை வள்ளிக்கிழங்கு எனும் இனிப்பு உருளைக்கிழங்குகளில் நார்ச்சத்து மிகுந்து காணப்படுகிறது. இது சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்தது அல்ல. இதில் பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் ஏ மற்றும் சி ஆகியவை உள்ளன.
டர்னிப் எனும் காய்கறியில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. மேலும் இதில் வைட்டமின் சி காணப்படுகிறது.
செரிமானத்தை ஊக்குவிக்கும் வேர்க் காய்கறியான முள்ளங்கி ஒரு முக்கிய உணவுப் பொருளாகும்.
பூண்டு நமது உணவில் இன்றியமையாத ஒன்றாகும். இதில் உள்ள அல்லிசின் நோய் எதிர்ப்புச் சக்தியைக் கூட்டுகிறது. மேலும் இது உடலிலுள்ள கொழுப்பு அணுக்கள் உருவாக்கத்தினை சீர்படுத்த உதவுகிறது.
இஞ்சியை உணவில் சேர்த்துக்கொள்வதன் முலம் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் கிடைக்கிறது.
வளர்சிதை மாற்றத்தை தூண்டுகிறது. வெறும் வயிற்றில் இஞ்சிச்சாறு அருந்துவதன்‌ மூலம் உடல் எடை குறையும் வாய்ப்பும் உள்ளது.

Related posts

ஒரு நாளைக்கு எத்தனை கிளாஸ் பால் குடிக்க வேண்டும்?

கோடை கால வெயிலை சமாளிக்க சில டிப்ஸ்!

வேகமா உடல் எடையை குறைக்கணுமா? இத ட்ரை பண்ணுங்க!