குளியல் பொடி டிப்ஸ்

பெண்கள் இயற்கையாகவே அழகு மிகுந்தவர்கள் என்பது உண்மைதான்.

ஆனால் அந்த அழகை பராமரித்துகொள்வது நல்ல விடயமாகும்.

எனவே எந்தவிதமான இரசாயன பொருட்களும் இல்லாமல் உடலை பளபளப்பாக வைத்திருந்தார்கள்.

உடலுக்கு தேவையான ஊட்டசத்துக்களை கொடுத்து உடலை பளபளப்பாக வைத்து கொள்ள ஒரு சில டிப்ஸ்சை பின்பற்றலாம்.

அந்த வகையில் உடலை பளபளப்பாக்க குளியல் பொடியில் அப்படி என்னென்ன பொருட்களை சேர்க்கிறார்கள்? அதிலிருக்கும் பலன்கள் தான் என்ன? என்பதனை கீழுள்ள பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
விரலி மஞ்சள் – 100 கிராம்
கஸ்தூரி மஞ்சள் – 100 கிராம்
ரோஜா இதழ் – 50 கிராம்
ஆவாரம் பூ – 50 கிராம்
வசம்பு – 50 கிராம்
கோரைக்கிழங்கு – 50 கிராம்
பூலாங்கிழங்கு – 50 கிராம்
செய்முறை
சருமம் பளபளப்பாக குளியல் பொடி இப்படித்தான் தயாரிக்கணும்

1. கொடுக்கப்பட்ட பொருட்களில் கிழங்கு வகைகளை துண்டங்களாக்கி 3 நாட்கள் தொடர்ந்து காய வைக்க வேண்டும்.

2. ரோஜா இதழையும், ஆவாரம் பூவையும் பயன்படுத்தினால் இரண்டு நாட்கள் மட்டும் நிழலில் ஆற வைக்கவும். (பொடியாக வாங்கினால் காய வைக்க வேண்டிய அவசியம் இல்லை)

3. காய வைக்கப்பட்ட கிழங்குகளை சின்னதாக உடைத்து மிக்ஸியில் போட்டு பவுடர் செய்து கொள்ளவும்.

4. அரைத்து பவுடரை சலித்து ஒரு காற்று உட்புகாத டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். இதனை சரியாக பின்பற்றினால் குளியல் பொடி தயார்.

உடலில் ஆங்காங்கே கரும் புள்ளிகள் தோன்றினால் அவை குளியல் பொடி பயன்பாட்டினால் மறையும்.

முகச்சுருக்கங்கள் மற்றும் முகப்பருக்கள் வராமல் தடுக்கப்படும், முகம் பார்ப்பதற்கு பொலிவுடன் காணப்படும்.

சிறு குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் பயன்படுத்தலாம். ஆண்கள் பயன்படுத்துவார்கள் என்றால் மஞ்சள் சேர்ப்பதை தவிர்ப்பது சிறந்தது.

பெண்களுக்கு முகத்தில் இருக்கும் பூனை முடிகள் இந்த பொடியால் மறைந்து விடும்.

வரட்சியாக இருக்கும் சருமம் குளியல் பொடி பயன்பாட்டினால் மென்மையாக மாறும்.

முக்கிய குறிப்பு

குளியல் பொடியை பயன்படுத்தும் போது சவர்காரங்கள் பயன்படுத்துவதை முற்றாக தவிர்க்கவும்.

Related posts

ஒரு நாளைக்கு எத்தனை கிளாஸ் பால் குடிக்க வேண்டும்?

கோடை கால வெயிலை சமாளிக்க சில டிப்ஸ்!

வேகமா உடல் எடையை குறைக்கணுமா? இத ட்ரை பண்ணுங்க!