இல‌ங்கை‌யி‌ல் பிளாஸ்டிக் பாவனைக்கு தடை!

இலங்கையில் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பாவனையைக் குறைத்தல் மற்றும் மீள்சுழற்சி  செயல்முறையை மேம்படுத்துதல் தொடர்பில்  கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போது, நாட்டில் லன்ச் ஷீட்கள்  பயன்பாட்டால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் மற்றும் அவற்றில் காணப்படும் தலேட் எனும் புற்றுநோய்க் காரணி மனித உயிர்களுக்கு ஏற்படுத்தும் பாதிப்புகள் ஆகியவை தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

அதற்கமைய, லன்ச் ஷீட்கள் பயன்படுத்துவதை தடை செய்தல் மற்றும் அவற்றுக்கான மாற்றீடுகளை அறிமுகப்படுத்துதல் ஆகியவை தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

மேலும் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பாவனையை குறைப்பதற்கு விசேட விடயங்களும் முன்வைக்கப்பட்டது.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!