தயாசிறி ஜயசேகரவுக்கு நீடிக்கப்பட்டது தடை

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் செயலாளர் நாயகம் தயாசிறி ஜயசேகர, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளரின் விவகாரங்களில் தலையிடுவதைத் தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை மேலும் நீடிக்க கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்றைய தினமே பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன மற்றும் அதன் பதில் பொதுச் செயலாளர் சாரதி துஷ்மந்த மித்ரபால ஆகியோர் சமர்ப்பித்த மனுவை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவின் தீர்மானத்தின் பிரகாரம், அதன் பொதுச் செயலாளராக கடமையாற்றிய தயாசிறி ஜயசேகர அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

அந்தப் பதவியின் பணிகளை மேற்பார்வையிட சாரதி துஷ்மந்த மித்ரபால நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!