கிறிஸ் கெயிலின் இமாலய சாதனையை முறியடித்த பாபர் அசாம்

பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் டி20யில் அதிவேகமாக 10,000 ஓட்டங்கள் எடுத்த வீரர் என்ற கிறிஸ் கெயிலின் சாதனையை தகர்த்தார்.

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் பாபர் அசாம் தலைமையிலான பெஷாவர் ஸல்மி அணி விளையாடி வருகிறது.

லாகூரில் நடந்த கராச்சி கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்தாலும், கேப்டன் பாபர் அசாம் 72 ரன்கள் விளாசினார்.

 

இதன்மூலம் அவர் டி20 கிரிக்கெட்டில், அதிவேகமாக 10,000 ரன்கள் எடுத்த வீரர் என்ற கிறிஸ் கெயிலின் சாதனையை முறியடித்தார்.

வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கெய்ல் 285 இன்னிங்ஸ்களில் 10,000 ரன்கள் எடுத்த நிலையில், பாபர் அசாம் 271 இன்னிங்ஸ்களில் எட்டியுள்ளார்.

டி20யில் 10,000 ரன்கள் குவித்த வீரர்கள்:

1. பாபர் அசாம் (பாகிஸ்தான்) – 271 இன்னிங்ஸ்

2. கிறிஸ் கெய்ல் (வெஸ்ட் இண்டீஸ்) – 285 இன்னிங்ஸ்

3. விராட் கோலி (இந்தியா) – 299 இன்னிங்ஸ்

4. டேவிட் வார்னர் (அவுஸ்திரேலியா) – 303 இன்னிங்ஸ்

5. ஆரோன் பின்ச் (அவுஸ்திரேலியா) – 327 இன்னிங்ஸ்

6. ஜோஸ் பட்லர் (இங்கிலாந்து) – 350 இன்னிங்ஸ்

 

Related posts

உலகக் கோப்பையை வென்ற இந்தியா! மோடி வாழ்த்து!

தேசிய அளவில் சாதனை படைத்த யாழ். மாணவி!

சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்ஷன்!