அதிவேக இரட்டை சதம் விளாசிய அவுஸ்திரேலிய வீராங்கனை

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் அவுஸ்திரேலிய வீராங்கனை அனபெல் சதர்லேண்ட் (Annabel Sutherland) இரட்டை சதம் விளாசி சாதனை படைத்தார்.

பெர்த்தில் அவுஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா மகளிர் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது.

தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 76 ரன்களுக்கு சுருண்டதைத் தொடர்ந்து, அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சை ஆடியது.

அந்த அணியில் பெத் மூனே 78 ரன்களும், ஹீலி 99 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

அதனைத் தொடர்ந்து மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்திய அனபெல் சதர்லேண்ட், அதிவேக இரட்டை சதத்தினை பதிவு செய்தார். அவர் 256 பந்துகளில் 2 சிக்ஸர், 27 பவுண்டரிகளுடன் 210 ரன்கள் விளாசினார்.

அவர் 248 பந்துகளில் 200 ரன்களை எட்டினார். இதன்மூலம் அதிவேகமாக இரட்டை சதம் அடித்த வீராங்கனை என்ற சாதனையை சதர்லேண்ட் படைத்தார்.

மேலும், இளம் வயதில் (22) இரட்டை சதம் அடித்த வீராங்கனை, சர்வதேச டெஸ்டில் இந்த சாதனையை படைத்த 9வது வீராங்கனை மற்றும் 5வது வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றார்.

Related posts

உலகக் கோப்பையை வென்ற இந்தியா! மோடி வாழ்த்து!

தேசிய அளவில் சாதனை படைத்த யாழ். மாணவி!

சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்ஷன்!