தன்னம்பிக்கையின் உச்சத்தில் அவுஸ்திரேலிய கேப்டன்! என்ன சொன்னார் தெரியுமா?

நாளை உலகக்கோப்பை இறுதிப் போட்டி நடக்கவுள்ள நிலையில் அவுஸ்திரேலிய கேப்டனின் தன்னம்பிக்கை பேச்சு இணையத்தில் பேசுபொருளாகி உள்ளது.
இந்தியாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா  அணிகள் மோதுகின்றன
இந்த தொடரில் இந்திய அணியானது ஒரு தோல்வியை கூட சந்திக்காமல் அசுர பலத்தில் இறுதிப்போட்டியை எதிர்கொள்கிறது.
அவுஸ்திரேலியா அரையிறுதியில் தென்னாப்பிரிக்காவிடம் போராடி வென்றது.
 நாளை குஜராத் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இறுதிப்போட்டி நடைபெற உள்ளது.
  இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த அவுஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் இறுதிப்போட்டி பற்றியும், பிட்ச் பற்றியும் பேசினார்.
“நாளை அகமதாபாத் மைதானத்தில் கூடும் கூட்டம் ஒரு சார்பாகவே இருக்கும். விளையாட்டில், அந்த 1.30 லட்சம் பேரை அமைதியாக்குவதை தவிர திருப்திகரமான ஒன்று எதுவும் இல்லை. நாளை அதுவே எங்கள் நோக்கமாக இருக்கும் ” என்று கூறியுள்ளார்.
5 முறை உலகக்கோப்பை வென்ற அணியினுடைய இன்றைய கேப்டனின் இந்த தன்னம்பிக்கைப் பேச்சு இணையத்தில் பேசுபொருளாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

உலகக் கோப்பையை வென்ற இந்தியா! மோடி வாழ்த்து!

தேசிய அளவில் சாதனை படைத்த யாழ். மாணவி!

சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்ஷன்!

1 comment

எந்தெந்த நாட்டு மக்கள் எந்தெந்த வேலையை நம்புகிறார்கள் தெரியுமா? - Namthesam Tamil News November 27, 2023 - 11:05 am
[…] என்ன எனும் தகவல் வெளியாகியுள்ளது. அவுஸ்திரேலிய மக்கள் மருத்துவ தொழிலை […]
Add Comment