U19 உலகக்கோப்பையை வென்ற அவுஸ்திரேலியா! இதுவரை சாம்பியனான அணிகள்

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி U19 இறுதிப்போட்டியில் இந்தியாவை வீழ்த்தி 4வது முறையாக சாம்பியன் ஆனது.

U19 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா, அவுஸ்திரேலியா அணிகள் மோதின.

முதலில் ஆடிய அவுஸ்திரேலிய அணி 253 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஹர்ஜாஸ் சிங் 55 (64) ரன்கள் எடுத்தார். கேப்டன் ஹூக் வெய்ப்கென் 48 ரன்களும், ஹாரி டிக்ஷன் 42 ரன்களும் எடுத்தனர்.

பின்னர் களமிறங்கிய இந்திய அணியில் ஆதர்ஷ் சிங் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, முருகன் அபிஷேக் அணியின் வெற்றிக்காக போராடினார்.

ஆனால், அவுஸ்திரேலியாவின் மிரட்டலான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய அணி 174 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது.

இதன்மூலம் அவுஸ்திரேலியா 79 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முருகன் அபிஷேக் 42 ரன்கள் எடுத்தார். பியர்டுமேன் மற்றும் ராப் மெக்மில்லன் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

அவுஸ்திரேலியா நான்காவது முறையாக ரு19 உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.

U19 உலகக்கோப்பையை வென்ற அணிகள்:

1. அவுஸ்திரேலியா (2024, 2010, 2002, 1988)

2. இந்தியா (2022, 2018, 2012, 2008, 2000)

3. பாகிஸ்தான் (2006, 2004)

4. வங்கதேசம் (2020)

5. வெஸ்ட் இண்டீஸ் (2016)

6. தென் ஆப்பிரிக்கா (2014)

7. இங்கிலாந்து (1998)

Related posts

உலகக் கோப்பையை வென்ற இந்தியா! மோடி வாழ்த்து!

தேசிய அளவில் சாதனை படைத்த யாழ். மாணவி!

சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்ஷன்!