U19 உலகக்கோப்பை அரையிறுதியில் அவுஸ்திரேலியா திரில் வெற்றி!

U19 உலகக்கோப்பை அரையிறுதியில், அவுஸ்திரேலிய அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டி முன்னேறியது.

ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது.

இந்திய அணி ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு நுழைந்ததைத் தொடர்ந்து, Willowmoore Park மைதானத்தில் அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இரண்டாவது அரையிறுதியில் மோதின.

முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி, டாம் ஸ்ட்ராக்கர் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 48.5 ஓவரில் 179 ரன்களுக்கு சுருண்டது.

அந்த அணியில் அராபத் மின்ஹாஸ் 52 (61) ரன்களும், அஸன் அவைய்ஸ் 52 (91) ரன்களும் எடுத்தனர்.

டாம் ஸ்ட்ராக்கர் 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார். டாம் கேம்பெல், பியர்ட்மேன்,, விட்லர் மற்றும் மேக் மில்லன் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.

பின்னர் ஆடிய அவுஸ்திரேலிய அணியில் ஹாரி டிக்ஷனை தவிர பிற வீரர்கள் அடுத்தடுத்து அவுட் ஆகினர்.

எனினும், ஒலிவர் பேக்கே மற்றும் ஹாரி டிக்ஷன் கூட்டணி அணியின் ஸ்கோரை உயர்த்தியது.

அரைசதம் அடித்த ஹாரி டிக்ஷன் 50 (75) ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் டாம் கேம்பெல் பொறுப்புடன் 25 ரன்கள் எடுத்தார்.

அடுத்து ஒலிவர் பேக்கே 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, மேக்மில்லன் (19) இறுதிவரை களத்தில் நின்று வெற்றியை நிலை நாட்டினார்.

9 விக்கெட்டுக்களை இழந்த அவுஸ்திரேலியா 49.1 ஓவரில் 181 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

அவுஸ்திரேலியா வரும் 11ஆம் திகதி நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் இந்திய சந்திக்கிறது. Willowmoore Park மைதானத்திலேயே இப்போட்டியும் நடைபெற உள்ளது.

 

Related posts

உலகக் கோப்பையை வென்ற இந்தியா! மோடி வாழ்த்து!

தேசிய அளவில் சாதனை படைத்த யாழ். மாணவி!

சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்ஷன்!