வெஸ்ட் இண்டீசை 86 ரன்னில் சுருட்டி ஒயிட்வாஷ் செய்த அவுஸ்திரேலியா

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், அவுஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.

கான்பெர்ராவின் Manuka Oval மைதானத்தில் நடந்த மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் முதலில் ஆடியது.

பார்ட்லெட், மோரிஸ் மற்றும் ஜம்பாவின் மிரட்டலான பந்துவீச்சில் வெஸ்ட் இண்டீஸ் அணி சரிந்தது.

அலிக் அதனஸி (32), கார்ட்டி (10) மற்றும் ரஸ்டன் சேஸ் (12) ஆகியோரைத் தவிர ஏனைய வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர்.

இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 24.1 ஓவரில் 86 ரன்களுக்கு சுருண்டது.

பார்ட்லெட் 4 விக்கெட்டுகளும், லன்ஸ் மோரிஸ் மற்றும் ஜம்பா தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

பின்னர் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி 6.5 ஓவரிலேயே 2 விக்கெட் இழப்பிற்கு 87 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

ஜேக் பிரேசர் மெக்கர்க் 18 பந்துகளில் 3 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 41 ரன்கள் விளாசினார். இங்கிலீஸ் ஆட்டமிழக்காமல் 16 பந்துகளில் ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 35 ரன்கள் எடுத்தார்.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என அவுஸ்திரேலியா கைப்பற்றி வெஸ்ட் இண்டீசை ஒயிட்வாஷ் செய்தது.

ஆட்டநாயகன் விருதைப் பெற்ற பார்லெட், இரண்டு போட்டிகளில் 8 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் தொடர் நாயகன் விருதையும் கைப்பற்றினார்.

இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் வரும் 9ஆம் திகதி தொடங்குகிறது.

Related posts

உலகக் கோப்பையை வென்ற இந்தியா! மோடி வாழ்த்து!

தேசிய அளவில் சாதனை படைத்த யாழ். மாணவி!

சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்ஷன்!