10 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை காலி செய்த அவுஸ்திரேலியா !

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் அவுஸ்திரேலியா 10 விக்கெட் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றி பெற்றது.

அடிலெய்டு டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் இன்னிங்சில்188 ரன்களுக்கு சுருண்டது.

பின்னர் ஆடிய அவுஸ்திரேலியா 283 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. டிராவிஸ் ஹெட் 119 ரன்கள் விளாசினார். வெஸ்ட் இண்டீசின் ஷாமர் ஜோசப் 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

அதன் பின்னர் 95 ரன்கள் பின்தங்கிய நிலையில் வெஸ்ட் இண்டீஸ் இரண்டாவது இன்னிங்க்ஸை தொடங்கியது.

தொடக்க வீரர்களை ஹேசல்வுட் தனது பந்துவீச்சில் காலி செய்தார். அடுத்து வந்த அதனஸி (0), கவேம் ஹாட்ஜ் (3) ஆகியோரும் அவரது பந்துவீச்சில் விக்கெட்டுகளை இழந்தனர்.

மெக்கென்சி 26 ரன்கள் எடுத்த நிலையில் க்ரீன் ஓவரில் அவுட் ஆனார்.

அதனைத் தொடர்ந்து ஜஸ்டின் கிரீவ்ஸை 24 ரன்களில் லயன் வெளியேற்ற, ஜோஷுவா டா சில்வா (18) மற்றும் அல்சரி ஜோசப் (16) இருவரும் ஸ்டார்க் ஓவரில் வீழ்ந்தனர்.

இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 120 ரன்களுக்கு சுருண்டது. ஹேசல்வுட் 5 விக்கெட்டுகளையும், ஸ்டார்க் மற்றும் லயன் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

அடுத்து 26 ரன்கள் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய அவுஸ்திரேலியா 6.4 ஓவரில் வெற்றி பெற்றது.

Related posts

உலகக் கோப்பையை வென்ற இந்தியா! மோடி வாழ்த்து!

தேசிய அளவில் சாதனை படைத்த யாழ். மாணவி!

சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்ஷன்!