வெற்றியுடன் வார்னருக்கு பிரியாவிடை கொடுத்த அவுஸ்திரேலியா!

அவுஸ்திரேலியா பேட்டர் டேவிட் வார்னர் தனது கடைசி டெஸ்டில் வெற்றியுடன் விடை பெற்றார்.

சிட்னியில் நடந்த கடைசி டெஸ்டில் பாகிஸ்தான் அணி 2வது இன்னிங்சில் 115 ரன்களுக்கு சுருண்டது.

அதிகபட்சமாக அயூப் 33 ரன்களும், ரிஸ்வான் 28 ரன்களும் எடுத்தனர்.

ஹேசல்வுட் 4 விக்கெட்டுகளும், லயன் 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

பாகிஸ்தான் ஏற்கனவே 14 ரன்கள் முன்னிலை பெற்றிருந்ததால் அவுஸ்திரேலிய அணிக்கு 130 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அவுஸ்திரேலிய அணியில் களமிறங்கிய கவாஜா ரன் எடுக்காமல் அவுட் ஆனார்.

எனினும் டேவிட் வார்னர் 57 ரன்களும், லபுஷேன் 62 ரன்களும் விளாசியதன் மூலம் அவுஸ்திரேலியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மேலும் பாகிஸ்தானை 3-0 என வாஷ்அவுட் செய்து அவுஸ்திரேலியா வார்னரை வெற்றிக் கோப்பையுடன் வழியனுப்பியது.

டேவிட் வார்னர் 112 டெஸ்ட்களில் 8,786 ரன்கள் குவித்துள்ளார். இதில் 26 சதங்கள் மற்றும் 37 அரைசதங்கள் அடங்கும்.

Related posts

உலகக் கோப்பையை வென்ற இந்தியா! மோடி வாழ்த்து!

தேசிய அளவில் சாதனை படைத்த யாழ். மாணவி!

சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்ஷன்!