நியூசிலாந்து மரண அடி கொடுத்து தொடரை வென்ற அவுஸ்திரேலியா

ஆக்லாந்தில் நடந்த 2வது டி20-யில் அவுஸ்திரேலிய அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது.

ஈடன் பார்க் மைதானத்தில் நடந்த போட்டியில் அவுஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது.

ஸ்டீவ் ஸ்மித் 11 ரன்னில் பெர்குசன் பந்துவீச்சில் அவுட் ஆனார். அதன் பின்னர் அதிரடியில் மிரட்டிய டிராவிஸ் ஹெட் 22 பந்துகளில் 45 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழக்க, பேட் கம்மின்ஸ் பவுண்டரிகளை விளாசி 28 ரன்கள் எடுத்தார்.

இதன்மூலம் அவுஸ்திரேலிய அணி 174 ரன்கள் குவித்தது. பெர்குசன் 4 விக்கெட்டுகளும், சியர்ஸ் மற்றும் சான்ட்னர் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து அணி 26 ரன் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது. க்ளென் பிலிப்ஸ் மட்டும் நின்று ஆட, ஆடம் ஜாம்பா பந்துவீச்சில் ஏனைய வீரர்கள் தங்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

அணியின் ஸ்கோர் 83 ஆக உயர்ந்தபோது பிலிப்ஸ் ஆட்டமிழந்தார். அவர் 35 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார். அடுத்து போல்ட் 16 ரன்களிலும்,பெர்குசன் 4 ரன்களிலும் ஆட்டமிழக்க நியூசிலாந்து 102 ரன்களுக்கு சுருண்டது.

இதன்மூலம் 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா தொடரை வென்றது. பேட் கம்மின்ஸ் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

 

Related posts

உலகக் கோப்பையை வென்ற இந்தியா! மோடி வாழ்த்து!

தேசிய அளவில் சாதனை படைத்த யாழ். மாணவி!

சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்ஷன்!