கனடா மக்களே எச்சரிக்கை! பொலிசார் வெளியிட்ட புகைப்படம்

கனடாவில் உள்ள ரொறன்ரோவில் வீடு தோறும் சென்று நிதி திரட்டிய நபர் குறித்து, புகைப்படம் வெளியிட்டு பொலிசார் எச்சரித்துள்ளனர்.

இது குறித்து ரொறன்ரோ பொலிசார் வெளியிட்டுள்ள தகவலில், கடந்த 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல், குறிப்பிட்ட நபர் சிக்கிட்ஸ்(SickKids) அமைப்பின் சார்பாக நிதி திரட்டுவதாக கூறி, ரொறன்ரோவில் உள்ள வீடுகளுக்கு சென்று பணம் திரட்டியுள்ளார்.

இந்த நபர் பார்ப்பதற்கு உண்மையான சிக்கிட்ஸ் அமைப்பை சேர்ந்தவர் போன்று உடை அணிந்து, அடையாள அட்டையுடன், வலம் வந்துள்ளார்.

ஆனால், இந்த நபர் அந்த அமைப்பை சேர்ந்தவர் இல்லை என்று ஜனவரி மாதம் எச்சரிக்கப்பட்டது. இருப்பினும் தற்போது புகைப்படம் கிடைத்துள்ளதால், பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பதற்கு இது வெளியிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சிக்கிட்ஸ் அமைப்பு, தாங்கள் நிதியுதவி கோரி எந்த உறுப்பினரையும் அனுப்பவில்லை என்று விளக்கமளித்துள்ளது.

 

Related posts

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

அமெரிக்க தேர்தல்: பைடனுக்கு தொடரும் எதிர்ப்பு!

சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து!