பிரான்சில் மகனின் பிறந்தநாளை கொண்டாடிய அட்லீ

பிரபல இயக்குநர் அட்லீ தனது மகனின் முதல் பிறந்தநாளை பிரான்சில் கொண்டாடியுள்ளார்.
தமிழ் இயக்குநர் அட்லீ, இந்தியில் ஷாரூக் கானை வைத்து இயக்கிய ‘ஜவான்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.
1000 கோடிக்கு மேல் இந்த திரைப்படம் வசூல் செய்ததைத் தொடர்ந்து இந்திய அளவில் அட்லீ பிரபல இயக்குனராக உருவெடுத்துள்ளார்.
அட்லீ – பிரியா தம்பதிக்கு கடந்த ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது.
இந்த நிலையில் அட்லீ தனது மனைவி மற்றும் மகனுடன் பிரான்ஸ் நாட்டிற்கு சென்றுள்ளார்.
அங்கு தனது மகனின் முதலாவது பிறந்தநாளை கொண்டாடியதுடன், இதுதொடர்பான புகைப்படங்களையும் எக்ஸ் தளத்தில் அட்லீ பகிர்ந்துள்ளார்.
மேலும் அவரது பதிவில், ‘எங்கள் சின்னவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் மற்றும் புதிய கடவுள் அனுப்பிய நண்பரான நீ 1 வயதை எட்டியதை நம்ப முடியவில்லை.
இந்த அழகான சிறிய பரிசை கொடுத்த கடவுளுக்கு நன்றி. நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்.
எங்கள் அன்பான குட்டி மீருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
அம்மாவும், அப்பாவும் உன்னை அதிகபட்சமாக எப்போதும் நேசிப்பார்கள்.
உன்னை கடவுள் நிறைய புன்னகையுடனும், மகிழ்ச்சியுடனும் ஆசீர்வதிப்பாராக’ என தெரிவித்துள்ளார்.

Related posts

தாய்லாந்தில் நடந்து முடிந்த வரலட்சுமி சரத்குமார் திருமணம்!

தனுஷ் படத்துக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்!

ஜெயம் ரவி -ஆர்த்தி டைவர்ஸ் உண்மையாம்! பிரபலம் கொடுத்த ஷாக்!