தடுப்பூசிகளை திரும்பப் பெற்ற அஸ்ட்ராஜெனகா!

கொரோனா காலத்தில் வழங்கப்பட்ட அஸ்ட்ராஜெனகாவின் கோவிட் தடுப்பூசி பக்கவிளைவுகளை ஏற்படுத்தியதாக புகார் எழுந்த நிலையில் தற்போது உலக அளவில் கொரோனா தடுப்பூசியை அந்த நிறுவனம் திரும்ப பெறுகிறது.

அதில் பக்க விளைவுகள் பிரச்சினை காரணமாக தடுப்பூசிகள் திரும்பப் பெறவில்லை எனவும், வணிக காரணங்களுக்காக வாபஸ் பெறுவதாக அந்த நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவின் வூஹான் மாநிலத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் அதற்கு அடுத்ததாக உலகம் முழுவதும் பரவியது. இந்தியாவில் அடுத்த இரு ஆண்டுகளில் அதன் பாதிப்பு எண்ணிப் பார்க்க முடியாத அளவு இருந்தது.

லட்சக்கணக்கில் உயிரிழப்பு இருந்த நிலையில், இந்தியாவில் கொரோனா தடுப்பூசி திட்டம் தீவிரப்படுத்தப்பட்டது. மருத்துவ கட்டமைப்புகள் மத்திய மாநில அரசுகளின் தீவிர முயற்சி காரணமாக கொரோனா கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது.

கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் சிலருக்கு ரத்த உறைவு மற்றும் ரத்த பிளேட்லெட் குறைவு பிரச்சனை ஏற்படலாம் என அஸ்ட்ராஜெனகா நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. இதனால் கோவிஷீல்டு போட்டுக் கொண்ட மக்கள் அச்சத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் இந்தியாவிலும் கோவிஷில்ட் தடுப்பூசியால் பக்க விளைவுகள் ஏற்பட்டது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தொடரப்பட்டன. தடுப்பூசியால் ஏற்பட்ட பக்க விளைவுகள் குறித்து நிபுணர் குழுவை அமைத்து விசாரிக்க வேண்டும், பக்க விளைவுகள் காரணமாக உயிரிழந்த நபர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.

இதற்கிடையே கொரோனா தடுப்பூசியை உலக அளவில் திரும்ப பெற்றுக் கொள்வதாக அஸ்ட்ராஜெனகா நிறுவனம் தெரிவித்துள்ளது. அரிதிலும் அரிதாக சிலருக்கு பக்கவிளைவுகள் ஏற்படுவதாக உலகம் முழுவதும் வழக்குகளும் புகார்களும் எழுந்திருக்கும் நிலையில் இந்த திடீர் முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.

அதே அதே நேரத்தில் பக்க விளைவு புகார் காரணமாக தடுப்பூசிகளை திரும்ப பெறவில்லை எனவும் வணிக காரணங்களுக்காக தடுப்பூசிகள் திரும்ப பெறப்படுவதாக அந்த நிறுவனம் விளக்கம் அளித்து இருக்கிறது.

Related posts

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

அமெரிக்க தேர்தல்: பைடனுக்கு தொடரும் எதிர்ப்பு!

சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து!