இங்கிலாந்து அணியை சுழலில் மூழ்கடித்த அஸ்வின், குல்தீப்

ராஞ்சி டெஸ்டில் இங்கிலாந்து அணியை அஸ்வின் மற்றும் குல்தீப் பந்துவீச்சு கூட்டணி 145 ரன்களில் சுருட்டியது.

நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதி வருகின்றன. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 353 ரன்களும், இந்திய அணி 307 ரன்களும் எடுத்தன.

அதனைத் தொடர்ந்து இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. அஷ்வின் பந்துவீச்சில் பென் டக்கெட் 15 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அதன் பின்னர் ஓலி போப் (0), ஜோ ரூட் (11) இருவரும் அஸ்வின் ஓவரில் விக்கெட்டை இழந்தனர். எனினும் அரைசதம் விளாசிய ஜக் கிராவ்லே 60 ரன்களில் குல்தீப் யாதவ் பந்துவீச்சில் போல்டு ஆனார்.

அடுத்து களமிறங்கிய கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 4 ரன்னில் வெளியேற, பேர்ஸ்டோவ் 30 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

பின்னர் வந்த வீரர்களும் சொற்ப ரன்னில் வெளியேறியதால், இங்கிலாந்து அணி 145 ரன்களுக்கு சுருண்டது. அஸ்வின் 5 விக்கெட்டுகளும், குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

இதனைத் தொடர்ந்து 192 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 40 ரன்கள் எடுத்துள்ளது.

Related posts

உலகக் கோப்பையை வென்ற இந்தியா! மோடி வாழ்த்து!

தேசிய அளவில் சாதனை படைத்த யாழ். மாணவி!

சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்ஷன்!