சியோமி பயனாளரா நீங்கள்? வெளியானது தரமான அப்டேட்

சியோமி (Xiaomi) நிறுவனத்தின் சில மொபைல் போன்களில் wifi 7 அப்கிரேடை (Upgrade) அறிமுகப்படுத்துவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
தற்போது நாம் பயன்படுத்தும் வைஃபை 6ஐ விட, வரவிருக்கும் wifi 7 அப்கிரேடானது 3 மடங்கு இணைய வேகத்தை கொண்டதாகும்.
Wifi 7, மிக உயர்ந்த செயல் திறன் மற்றும் அடுத்த தலைமுறை தரநிலைகளை கொண்டதாகும்.
இது 320 MHz அலைவரிசை, பல இணைப்புகள் சேர்ந்த செயல்பாடு மற்றும் 23 Gbps வரையிலான வேகத்தை தொடும் சிறப்பான அம்சங்களுடன் வெளியாகவுள்ளது.
இனி வரும் காலங்களில் நாம் வாங்கும் ஸ்மார்ட் போன்களில் இயல்பாகவே இந்த wifi 7 அம்சமானது இடம்பெறும்.
ஆயினும், தற்போது சியோமி தனது நிறுவனத்தின் சியோமி 13 சீரிஸ், சியோமி 14 சீரிஸ், சியோமி மிக்ஸ் ஃபோல்ட் 3 ஆகிய போன்களில் wifi 7 அப்கிரேட் கிடைக்கும் என்று அறிவித்துள்ளது.
தற்போது வரவிருக்கும் இந்த wifi 7 அம்சம், மேம்பட்ட பயனர் அனுபவத்தை வழங்கும்.
இது ஒன்லைன் கேமிங்கில் ஈடுபடுவோருக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையவுள்ளது.
மேலும் ஒன்லைன் steaming போன்றவற்றை இன்னும் தரம் உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

வாட்ஸ்அப்பில் அறிமுகமாகும் புதிய அம்சம்!

iPad Air 2024 இன் சிறப்பம்சங்கள்!

முதன்முறையாக இலங்கை ஊடகத்துறையில் ஏ.ஐ தொழிநுட்பம்!