இறால் மீன்களில் இவ்வளவு நன்மைகளா!!

அதிகம் ருசி தரக்கூடிய இறால் மீன், நிறைய நன்மைகள் நிறைந்துள்ள மீன் என்று ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.

இறால் மீன்களில் நிறைய புரோட்டீனும், வைட்டமின் னு-யும் உள்ளன. முக்கியமாக இதில் கார்போஹைட்ரேட் அவ்வளவாக கிடையாது. அதனால்தான், உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், இந்த மீனை தாராளமாக சாப்பிடலாம்.

இறாலில் அஸ்டக்ஸாந்தின் என்ற கரோடெனாய்ட் அதிக அளவில் உள்ளது. இது மிகச்சிறந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டாக இது விளங்குகிறது.

அதனால்தான், சருமத்துக்கு பாதுகாப்பை இறால் மீன்கள் தருகின்றன.

வயதான தோற்றத்தையும் தள்ளிப்போட உதவியாக இருக்கிறது, இறாலிலுள்ள வைட்டமின் னு சத்துக்கள்.

இறால்களில் ஒளிந்திருக்கும், ஹெபாரின் என்ற பொருள், கண் கோளாறுகளை நீக்குகிறது. விழித்திரைக்கு பாதுகாப்பை தருவதுடன், கண் பார்வையை கூர்மையடைய செய்கிறது.

தலைமுடி அதிகமாக கொட்டினால், உணவில் தாராளமாக இறாலை சேர்த்து கொள்ளலாம். எலும்புகள் சிதைவு ஏற்பட்டாலும், பற்களின் உறுதிக்கும், இறாலிலுள்ள கால்சியம் துணை நிற்கிறது.

இறால் மீனில், மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட்டாக இருப்பது, அதிலிருக்கும் அயோடின் சத்துக்களும், அளவுக்கதிகமான கனிமச்சத்துக்களும்தான்.

ஹீமோகுளோபினில் ஆக்ஸிஜன் கலக்கும் செயலில் முக்கிய பங்கு வகிக்கிறது இந்த கனிமம்.

அதிகமான இரும்புச்சத்து உடம்பில் கலக்கும்போது, தசைகளுக்கு கூடுதல் அளவிலான ஆக்ஸிஜன் செல்லக்கூடும்.

இப்படிப்பட்ட இறால் மீனை குழந்தைகளுக்கு சாப்பிட தருவதால், மூளைக்கு செல்லும் ஆக்ஸிஜனின் அளவும் அதிகரித்து ஞாபக சக்தியும் அதிகரிக்கிறதாம்.

அதுமட்டுமல்ல, அயோடின் சத்துக்கள் இந்த மீனில் நிறைய உள்ளது. உடலில் தைராய்டு ஹார்மோன்கள் சுரக்கவும் அடித்தளமாக உள்ளது.

இந்த ஹார்மோன்கள் குழந்தை பருவத்திலும், கர்ப்பமாக இருக்கும் நேரத்திலும், மூளையின் வளர்ச்சிக்காக தேவைப்படுகிறது.

முக்கியமாக, நுரையீரல் புற்றுநோய்க்கு எதிராக போராடுவதில், இறால் மீன்களுக்கு நிறைய பங்குள்ளது. அந்தவகையில், தவிர்க்க கூடாத உணவாக, இறால் மீன்கள் விளங்கி வருகின்றன.

இறாலில் அயோடின் அபரிமிதமாக உள்ளதால், உடலில் தைராய்டு ஹார்மோன்கள் சுரக்க பேருதவி செய்கிறது.

இந்த ஹார்மோன்கள் குழந்தை பருவத்திலும், கர்ப்பமாக இருக்கும் நேரத்திலும் மூளையின் வளர்ச்சிக்காக தேவைப்படுகிறது.

மேலும், இறாலில் ஒமேகா-3 கொழுப்பமிலங்கள் நிரம்பி உள்ளன. இது பெண்களுக்கு மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் வலியை குறைக்கவும், பிறப்புறுப்புகளுக்கு சீரான முறையில் இரத்த ஓட்டம் இருக்கவும், பயன்படுகின்றன.

Related posts

ஒரு நாளைக்கு எத்தனை கிளாஸ் பால் குடிக்க வேண்டும்?

கோடை கால வெயிலை சமாளிக்க சில டிப்ஸ்!

வேகமா உடல் எடையை குறைக்கணுமா? இத ட்ரை பண்ணுங்க!