அர்ச்சனாவிற்கு ஏகப்பட்ட பரிசுகள் கிடைத்துள்ளதாம்

பிக் பாஸ் சீசன் 7ன் டைட்டில் வின்னரான அர்ச்சனாவிற்கு ஏகப்பட்ட பரிசுகளும் கிடைத்துள்ளது.

பிரபல டிவியில் கடந்த அக்டோபர் மாதம் 1ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

தற்போது 106 நாட்கள் கடந்து இன்றுடன் முடிவடைந்துள்ளது.

இந்நிகழ்ச்சியிலிருந்து அனன்யா, பவா செல்லதுரை, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்ன பாரதி, மற்றும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு பிரதீப், ஐஷு, கானா பாலா, ப்ராவோ, அக்ஷயா, ஜோவிகா, கூல் சுரேஷ், சரவண விக்ரம், ரவீனா, நிக்ஷன், விசித்ரா, பூர்ணிமா, அர்ச்சனா, மாயா, தினேஷ், விஷ்ணு, மணி சந்திரா என 23 பேர் கலந்து கொண்டனர்.

இந்த போட்டியின் டைட்டில் வின்னராக அர்ச்சனா பிக் பாஸ் கோப்பையை தட்டித் தூக்கியுள்ளார். இவர் வைல்டு கார்டு எண்ட்ரியாக 28வது நாளில் உள்ளே சென்றார்.

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் 105 நாட்கள் கடந்து வெற்றி பெற்ற நிலையில், இவர் மொத்தம் 77 நாட்கள் இருந்துள்ளார்.

ஒரு நாளைக்கு அர்ச்சனாவுக்கு 20 ஆயிரம் ரூபாய் சம்பளமாக பேசப்பட்டுள்ளதாம்.

ஆதலால் 77 நாட்களுக்கு 20 ஆயிரம் வீதம் ரூ. 15,40,000 சம்பளமாக வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.

இதுமட்டுமின்றி பரிசுத் தொகை, கார் என பரிசுகளை கிடைத்துள்ளன.

ஒட்டுமொத்தமாக வெறும் 77 நாட்களுக்கு இவ்வளவு பரிசுகளை பெற்று உச்சத்திற்கு சென்றுள்ளார்.

Related posts

விஜய் படத்தில் கமல்ஹாசன்?

இந்தியன் 2 படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?

இந்தியன் 2: லைகா வெளியிட்ட சூப்பரான வீடியோ!