முதியவர் உயிரைக் காப்பாற்றிய ஆப்பிள் வாட்ச்!

அமெரிக்காவில் 66 வயது முதியவரை ஆப்பிள் வாட்ச் காப்பாற்றியுள்ள ஆச்சரிய சம்பவம் நடந்துள்ளது.

அமெரிக்காவின் தெற்கு கலிஃபோர்னியாவை சேர்ந்தவர் ஜெஃப் ப்ரீஸ்ட் (66). இவர், எப்போதும் போலவே இயல்பாக இருந்தார். ஆனால், அவர் அணிந்திருந்த ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் அவரது இதயத்துடிப்பு சீரற்ற நிலையில் இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

இருப்பினும், அவர் தனக்கு இதற்கு முன்பு, இதயத்துடிப்பு தொடர்பான பிரச்சனைகள் இல்லாததால் ஆப்பிள் வாட்சின் எச்சரிக்கையை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. வாட்சில் ஏதோ தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதாக நினைத்துள்ளார்.

இதை அவரது மனைவி பார்த்து, ஜெஃப் ப்ரீஸ்டை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு மருத்துவர்கள் சோதித்து பார்த்தபோது,அவருக்கு இதயம் தொடர்புடைய பிரச்சனை இருப்பதை உறுதி செய்தனர். இதையடுத்து, அதற்கு ஊரிய மருந்துகளை மருத்துவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

அதன்பின்னும், ஆப்பிள் வாட்ச் அவருக்கு இதயத்துடிப்பில் பிரச்சனை இருப்பதாக ஆப்பிள் வாட்ச் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், அவர் தகுந்த மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்ள முடிவு செய்துள்ளார்.

Related posts

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

அமெரிக்க தேர்தல்: பைடனுக்கு தொடரும் எதிர்ப்பு!

சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து!