இந்தியப் பெருங்கடலில் மீண்டும் ஒரு நிலநடுக்கம்..

இந்தியப் பெருங்கடலில் இன்று (29) காலை 8 மணியளவில் மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்தியப் பெருங்கடல் பகுதியில் 4 நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5 ஆக பதிவானதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் சிரேஷ்ட நில அதிர்வு நிபுணர் நில்மினி தல்தேன தெரிவித்தார்.

முன்னதாக, ரிக்டர் அளவுகோலில் 4.8, 5.2 மற்றும் 5.8 என 3 நிலநடுக்கங்கள் பதிவாகியிருந்தன.

இந்த நிலநடுக்கங்கள் காரணமாக இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கங்கள் இந்தியப் பெருங்கடலில் மாலத்தீவுக்கு அருகில் பதிவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரானால் வரவேற்போம்: செல்வப்பெருந்தகை!