விவசாயிகளின் மின்கட்டண குறைப்பு தொடர்பான அறிவிப்பு!

விவசாய தேவைகளுக்காக மின்சாரத்தை பயன்படுத்தும் வடமாகாண விவசாயிகளின் மின்சார கட்டணத்தை குறைப்பதற்கு அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்படும் என விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

விவசாய நடவடிக்கைகளில் பெரும் முயற்சியுடன் அனைத்துப் பணிகளையும் முன்னெடுக்கும் வடமாகாண மக்களின் அர்ப்பணிப்பை கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

அபிவிருத்தி நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தும் போது அமைச்சுக்களுக்கு ஒதுக்கப்படும் பணத்தின் பெரும்பகுதியை வடக்கு, கிழக்கு மாகாண மக்களுக்கே ஒதுக்க வேண்டும் என அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

வடமாகாண விவசாயிகள் தமது விவசாய நடவடிக்கைகளுக்கு மின்சாரத்தை பயன்படுத்தும் போது ஓரளவு நிவாரணம் வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதற்கமைவாக விவசாய தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் மின்சாரக் கட்டணங்களுக்கு ஓரளவு நிவாரணம் வழங்கும் வகையில் அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!