சிக்கலில் விழுந்த நயன்தாரா

தென்னிந்திய நடிகையான நயன்தாரா நடிப்பில் உருவான அன்னபூரணி திரைப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் 1ஆம் திகதி வெளியானது.

இந்த படத்தை ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய நிலேஷ் கிருஷ்ணா இயக்கியுள்ளார்.

இந்த படம் நயன்தாராவின் கேரியரில் 75-வது திரைப்படமாகும்.

இப்படத்தில் ஜெய், சத்யராஜ், அச்யுத் குமார், கே.எஸ்.ரவிக்குமார், ரேணுகா எனப் பல பிரபலங்கள் நடித்து உள்ளனர்.

சமீபத்தில் ரமேஷ்சோலங்கி என்பவர், அன்னபூரணி படத்தில் மத உணர்வைப் புண்படுத்துவதாகவும், லவ்ஜிகாத்தை ஆதரிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்று இருக்கிறது.

இந்த மாதிரியான படங்களை வெளியிட்டு வரும் Netflix தளத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில், அன்னபூரணி திரைப்படம்  Netflix OTT தளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

Related posts

விஜய் படத்தில் கமல்ஹாசன்?

இந்தியன் 2 படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?

இந்தியன் 2: லைகா வெளியிட்ட சூப்பரான வீடியோ!