ஐபோனை போலவே இனி ஆண்ட்ராய்டு பயனர்களும் பேட்டரியை கண்காணிக்கலாம்!

IPhone-களில் உள்ளதைப் போலவே ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களிலும் Battery Indicator அம்சத்தை கூகுள் கொண்டுவர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மொபைல் ஆரோக்கியத்தை கண்காணிக்க IPhone-களில்  Battery Indicator எனும் அம்சம் உள்ளது.

அதாவது எந்த அளவிற்கு Battery பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை இதன்மூலம் அறியலாம்.

ஸ்மார்ட்போன்களை பொறுத்தவரை லித்தியம்-அயர்ன் பேட்டரிகள் உள்ளன. இவை ரசாயன தன்மை காரணமாக காலப்போக்கில் Charge-ஐ சேமித்து வைக்கும் திறனை இழக்கக்கூடும்.

இதன் காரணமாக, உங்கள் போனில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு அதன் Battery degradation-ஐ அதாவது Charge-ஐ சேமித்து வழங்குவதற்கான Battery-யின் திறன் குறைவதை தவிர்க்க முடியாது.

ஆனால், Mobile Battery Degration-ஐ மெதுவாக்க வழிகள் உள்ளன.

அதனை பின்பற்றி உங்கள் பேட்டரியை இன்னும் சில நாட்கள் பயன்படுத்த முடியும்.

இதற்காக தான் Iphone-யில்  battery  எவ்வளவு Degraded  ஆகியிருக்கிறது என்பதை பயனர்களுக்கு தெரியப்படுத்த தனி அம்சம் பயன்படுத்தப்படுகிறது.

ஆனால், ஆண்ட்ராய்டு பயனர்களோ இதற்காக Third party செயலிகளையே நம்பியுள்ளனர்.

எனவே தான் ஐபோன்களில் காணப்படும் Battery Health  அம்சமானது Pixel மற்றும் Android-யில் இயங்கும் பிற ஸ்மார்ட்போன்களுக்கு அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தெரிய வந்துள்ளது.

இந்த புதிய அம்சம் அறிமுகமானால், ஸ்மார்ட்போன்களில் device-களின் செயல்திறன் மேலும் மேம்படும்.

ஆண்ட்ராய்டு பயனர்களும் தங்கள் மொபைல்களின் ஆரோக்கியத்தை கண்காணிக்க முடியும்.

மேலும் பயனர்கள் தங்கள் battery cycle count  மற்றும் battery-யின் உற்பத்தி திகதியை பார்க்க முடியும்.

கடந்த டிசம்பரில் Feature drop எனும் Update-ஐ கூகுள் தனது pixel போன்களுக்கு அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Related posts

வாட்ஸ்அப்பில் அறிமுகமாகும் புதிய அம்சம்!

iPad Air 2024 இன் சிறப்பம்சங்கள்!

முதன்முறையாக இலங்கை ஊடகத்துறையில் ஏ.ஐ தொழிநுட்பம்!