Rangpur Riders-ஐ பொளந்துகட்டிய ஆண்ட்ரே ரசல்

வங்கதேச பிரீமியர் லீக்கில் Comilla Victorians அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் Rangpur Riders அணியை வீழ்த்தியது.

முதலில் ஆடிய Rangpur Riders அணியில் தொடக்கத்தில் விக்கெட்டுகள் வீழ்ந்த நிலையில், நீஷம் அதிரடியில் மிரட்டினார்.

கடைசிவரை களத்தில் நின்ற அவர் 42 பந்துகளில் 2 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 69 ரன்கள் விளாசினார். ஷாகிப் 19 பந்துகளில் 24 ரன்கள் எடுத்தார்.

இதன்மூலம் Rangpur Riders அணி 19.5 ஓவரில் 150 ரன்கள் எடுத்தது. ஆண்ட்ரே ரசல் மற்றும் முஸ்பிக் ஹசன் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய Comilla அணியில் சுனில் நரைன் 15 ரன்களிலும், டௌஹிட் ரன் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர்.

கேப்டன் லித்தன் தாஸ் மற்றும் மஹிடுல் இஸ்லாம் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

தாஸ் 42 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து வெளியேற, மஹிடுல் 39 (29) ரன்களில் ஆட்டமிழந்தார்.

ஆனாலும் ஆண்ட்ரே ரசல் சரவெடியாய் வெடித்தார். சிக்ஸர் மழை பொழிந்த அவர், 12 பந்துகளில் 4 சிக்ஸர் மற்றும் 4 பவுண்டரிகளுடன் 43 ரன்கள் விளாசினார்.

இதன்மூலம் 17.4 ஓவர்களிலேயே Comilla அணி 151 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஆண்ட்ரே ரசல் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

 

Related posts

உலகக் கோப்பையை வென்ற இந்தியா! மோடி வாழ்த்து!

தேசிய அளவில் சாதனை படைத்த யாழ். மாணவி!

சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்ஷன்!