காசா மீது இஸ்ரேல் மீது அராஜக தாக்குதல் நடத்துகிறது! எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்

காசா மீது மனிதாபிமானமற்ற தாக்குதலை நடத்தி அப்பாவி மக்களின் உயிர்களை இஸ்ரேல் எடுப்பதாக தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளார்.

ஹமாஸ் – இஸ்ரேல் போர் நீடித்து வரும் நிலையில் காசாவில் பலியாகும் பொதுமக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இதுவரை 13,000க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர் என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள மக்கள் போர் நிறுத்தம் வேண்டும் என ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்.
ஆனாலும் இஸ்ரேல் காசா மீதான தாக்குதலை கைவிடவில்லை.
இந்த நிலையில், அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி,
இஸ்ரேலை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், “காசா மீதான தாக்குதலின் விளைவாக ஏராளமான பெண்கள் குழந்தைகள், கணவனை இழந்தும், தாய் தந்தையை இழந்தும் தவிக்கின்றனர்.
காசா ஒரு பேரழிவின் நகரமாக காட்சி அளிக்கிறது; இது குறித்து உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தும் இஸ்ரேல் செவி சாய்க்கவில்லை” எனக் கூறியுள்ளார்.
மேலும், “இது தொடர்பில் ஐ.நா கண்டனம் தெரிவித்தும் செவி சாய்க்காமல் மனித உரிமைகளை மீறி, ஐ.நா முகாம் மீது குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இது ஒரு மனித தன்மையற்ற செயல். காசா மீது இஸ்ரேல் மனித உரிமைகளை மீறி அராஜகம் செய்து தாக்குதலை நடத்துவது கண்டனத்திற்குரியது.
சுதந்திர காலத்தில் இருந்தே பாலஸ்தீன – இஸ்ரேல் விவகாரத்தில் நம் முன்னோர்கள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக இருந்தார்கள். எனவே, இந்தியா தொடர்ந்து பாலஸ்தீன ஆதரவை கடைப்பிடிக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரானால் வரவேற்போம்: செல்வப்பெருந்தகை!

1 comment

உயிரிழந்ததாக எண்ணி மயானத்திற்கு சென்றபோது காத்திருந்த அதிர்ச்சி! - Namthesam Tamil News November 28, 2023 - 7:09 pm
[…] ஆழ்த்தியது. திருச்சியில் மணப்பாறை அருகே மருங்காபுரியை ஒட்டிய […]
Add Comment