ஆஸ்கார் விருது வென்ற நடிகர் மர்மமான முறையில் பலி..

ஆஸ்கார் விருது வென்ற பாரசைட் திரைப்படத்தில் நடித்திருந்த பிரபல தென் கொரிய நடிகரான லீ சுன்-கியூன் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார்.

மத்திய சியோலில் உள்ள ஒரு பூங்காவில் காருக்குள் இன்று உயிரிழந்துள்ள நிலையில் காணப்பட்டுள்ளது.

நடிகர் லீ சுன்-கியூனின் உடலை கைப்பற்றிய பொலிஸார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

லீ சுன்-கியூன் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மன வருத்தத்தில் இருந்த நடிகர் லீ சுன்-கியூன் தற்கொலை தொடர்பில் ஒரு தகவலை எழுதி வைத்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறியதாக அவரது குடும்பத்தினர் கூறியதையடுத்து அவரை பொலிஸார் தேடி வருவதாக தகவல் வெளியிட்டுள்ளன.

Related posts

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

அமெரிக்க தேர்தல்: பைடனுக்கு தொடரும் எதிர்ப்பு!

சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து!