நுரைச்சோலை அனல்மின் நிலையம் குறித்து மின்சார சபையின் முக்கிய அறிவிப்பு!

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் செயலிழந்த நிலையில் உள்ள மின்உற்பத்தி இயந்திரம் ஒன்று பழுது நீக்கப்பட்டதன் பின்னர் இன்று (11) இணைக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அனல்மின் நிலையத்தின் மூன்று மின்உற்பத்தி இயந்திரங்களும் செயலிழந்த நிலையில் இருந்தமையால் பழுது நீக்கும் பணி உடனடியாக ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
திருத்தப் பணியின் காரணமாக நேற்று முன்தினம் இரண்டு ஜெனரேட்டர்கள் செயலிழந்துள்ளதாகவும், மின் தடை காரணமாக மற்றைய ஜெனரேட்டரும் செயலிழந்துள்ளதாகவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
அதன்படிஇ பழுது நீக்கும் பணிக்கு பின், செயலிழந்த நிலையில் இருந்த ஜெனரேட்டர் ஒன்றுஇ இன்று இயக்கப்பட்டு, மின் இணைப்புடன் இணைக்கப்படவுள்ளது.
நீர் மின் உற்பத்தி தற்போது மும்முரமாக நடைபெற்று வருவதால் தேசிய மின்சார விநியோகத்திற்கு இந்த நிலைமை தடையாக இருக்காது என இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் தற்போது நிலவும் மின்சார நெருக்கடி தொடர்பில் கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சர் திரு.ரவி கருணாநாயக்கஇ மின்சார பாவனையாளரை பாதுகாக்கும் நடவடிக்கைகள் உடனடியாக அமுல்படுத்தப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மின்சார சபையை மறுசீரமைக்கும் முறை தொடர்பில் மின்சார பாவனையாளர்களுக்கு தெரியப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை மின்சார சபை பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் திரு.மாலக விக்கிரமசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!