இரண்டாவது டெஸ்டிலேயே 5 விக்கெட் வீழ்த்திய அசத்திய ஆப்கான் வீரர்

அயர்லாந்துக்கு எதிரான டெஸ்டில் ஆப்கானிஸ்தான் வீரர் ஜியா உர் ரெஹ்மான் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

அபுதாபியில் ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது.

ஆப்கானிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 155 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்சில் களமிறங்கிய அயர்லாந்து அணியில் தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

அடுத்து களமிறங்கிய கேம்பர் 49 ரன்கள் விளாசினார். அதன் பின்னர் டெக்டர் 32 ரன்களில் வெளியேறினார். அரைசதம் அடித்த ஸ்டிர்லிங் 52 ரன்களிலும், டக்கர் 46 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

ஆண்டி மெக்பிரின் நிலைத்து நின்று ஆட, மார்க் அடைர் மற்றும் மெக்கர்த்தி ஆகியோரின் விக்கெட்டுகளை ஜியா உர் ரெஹ்மான் வீழ்த்தினார்.

இதன்மூலம் டெஸ்டில் தனது முதல் 5 விக்கெட்டை அவர் கைப்பற்றினார். இது அவரது இரண்டாவது டெஸ்ட் ஆகும்.

கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்த ஆண்டி மெக்பிரின் 38 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் அயர்லாந்து 263 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது.

பின்னர் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய ஆப்கானிஸ்தான் அணி இரண்டாம் நாள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்து, 26 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

கேப்டன் ஹஸ்மதுல்லா ஷஹிடி 53 ரன்களுடனும், ரஹ்மத்துல்லா குர்பாஸ் 23 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

Related posts

உலகக் கோப்பையை வென்ற இந்தியா! மோடி வாழ்த்து!

தேசிய அளவில் சாதனை படைத்த யாழ். மாணவி!

சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்ஷன்!