விஜய்க்கு போட்டியாக வரும் நடிகர்!

நடிகர் விஷால் விரைவில் கட்சி தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் சமீபத்தில் தமிழக வெற்றி கழகம் என தனது கட்சியின் பெயரை அறிவித்தார். இதைத் தொடர்ந்து 2026 சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடப்போவதாகவும் கூறியுள்ளார்.

இந்நிலையில், நடிகர் விஷாலும் கட்சி தொடங்க உள்ளராம். இதன் காரணமாகவே அவர் தனது ரசிகர் மன்றங்களை விஷால் மக்கள் நல இயக்கம் என மாற்றியுள்ளார். அதுமட்டுமின்றி, ஒவ்வொரு மாவட்டங்களிலும் பூத் கமிட்டிகளையும், பொறுப்பாளர்களையும் நியமித்துள்ளார்.

தொடர்ந்து மக்கள் குறைகளை கேட்டு, அதற்கு தன்னால் முடிந்த உதவுகளையும் அவர் செய்து வருகிறார்.

மேலும், சினிமாவிற்கு பின் நேரடி அரசியலில் குதிக்கப்போவதாக அவர் தனது நெருங்கிய நண்பர்களிடம் கூறியுள்ளார். இதனால், இவரும் 2026 தேர்தலில் களமிறங்கலாம், அது விஜய்க்கு போட்டியாக கூட மாறலாம் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!