இலங்கை கடற்பரப்பை கண்காணிக்க அமெரிக்க உளவு விமானம்!

இலங்கையை சுற்றியுள்ள கடலில் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக இலங்கைக்கு அமெரிக்கா உளவு விமானம் ஒன்றை வழங்கவுள்ளது. Beech King Air 360er  ரக புதிய விமானத்தை அமெரிக்கா வழங்கவுள்ளது.

எதிர்வரும் ஆண்டு ஜூன் அல்லது ஜூலை மாதத்திற்குள் குறித்த விமானம் இலங்கைக்கு கொண்டுவரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வான்வழியாக கடல்சார் கண்காணிப்பை மேற்கொள்ளும் திறன் கொண்ட அமெரிக்க பாதுகாப்பு படைகளுக்கு சொந்தமான இடைமறிப்பு விமானம் கடந்த மார்ச் மாதம் இலங்கைக்கு வந்துள்ளது.

இவ்வாறு வந்திறங்கிய விமானம் சேலஞ்சர் 605 என்ற கண்காணிப்பு விமானமாகும். இது விமானப்படை விமானிகள் மற்றும் இலங்கை முப்படை அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்க பயன்படுத்தப்பட்டது. மேலும், முப்படையைச் சேர்ந்த மேலும் பத்து அதிகாரிகள் அடுத்த சில மாதங்களில் பயிற்சிக்காக அமெரிக்கா செல்ல உள்ளனர்.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!