சீனாவைத் தொடர்ந்து இலங்கையில் கால் பதித்தது அமெரிக்கா!

அடுத்த மாதம் முதல் இலங்கையில் தனது செயற்பாடுகளை அமெரிக்காவை தளமாகக் கொண்ட பெற்றோலிய விநியோக நிறுவனமான RM Parks ஆரம்பிக்கவுள்ளது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

குறித்த நிறுவனம், தனது ஆரம்பக் கட்டணத்தை அரசிடம் வைப்பு செய்துள்ளது. மேலும், இந் நிறுவனம் ஆரம்பத்தில் 150 எரிபொருள் நிலையங்களை தன் கீழ் செயற்படுத்தவுள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
இலங்கை சந்தையில் பிரவேசித்த மூன்றாவது சர்வதேச பெற்றோலிய நிறுவனம் ஆர்.எம். பார்க்ஸ் ஆகும்.
ஏற்கனவே இந்த ஆண்டின் முற்பகுதியில், சீன பெற்றோலிய நிறுவனமான சினோபெக், தனது செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளது.
இதேவேளை, அவுஸ்திரேலியாவின் யுனைடெட் பெற்றோலிய நிறுவனமும்  இலங்கை சந்தைக்குள் விரைவில் நுழையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!